Nagaratharonline.com
 
ஆத்தங்குடியில் குடிநீர் பற்றாக்குறை  Jun 26, 10
 
போதிய குடிநீர் கிடைக் காததால், ஆத்தங்குடி கிராமத்தினர் கோயில் ஊரணி நீரை குடிக்கின்றனர். கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட இக்கிராமத்தில் 5,000 மேற்பட்டோர் வசிக் கின்றனர். மேட்டுப்பட்டி, அரண் மனைப்பட்டியில் 6,000 லிட்டர் குடிநீர் தொட்டிகள் உள்ளன. தினமும் ஒரு மணி நேரம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொது குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் சிவன் கோயில் ஊரணியில் குடிநீர் எடுக்கின்றனர்.



ஊராட்சி தலைவர் ஆண்டியப்பன் கூறுகையில்,""கோயில் ஊரணி முறைப்படி பராமரிக்கப்படுவதால், குடிநீராக பயன்படுத்துகின்றனர். மேட்டுப்பட்டியில் குடிநீர் பிரச்னை உள்ளது. இங்கு மேல்நிலை தொட்டி கட்ட திட்டமிட்டுள்ளோம். தூர்ந்து போன பொது குழாய்களை சீரமைத்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்


source ; Dinamalar