Nagaratharonline.com
 
ஆன்மிக, சுற்றுலா தலங்களை இணைக்கும் பஸ்கள்: எதிர்பார்ப்பு நிறைவேறுமா  Jun 26, 10
 
ஆன் மிக, சுற்றுலா தலங்களை இணைக் கும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, என். வயிரவன்பட்டி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், பிரான்மலை, திருக்கோளக் குடி, கானாடுகாத்தான், ஆத்தங்குடி, நேமம் உள்ளிட்ட புராதன சிறப்பு பெற்ற ஆன்மிக, சுற்றுலா தலங்கள் இம்மாவட்டத்தின் சிறப்பு. காரைக்குடி, திருப்புத் தூரை சுற்றி 10 கி.மீ., இடைவெளியில் இவை அமைந்துள்ளன. ஆனால், இவற்றை இணைக்கும் வகையில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை.



இதனால், இக்கோயில்கள் அனைத்திற்கும் செல்ல நினைப்போர் எளிதில் செல்ல இயலாது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் சென்று விட்டு. மற்றவற்றை பார்க்க இயலாமல் போய் விடுகிறது. இதனால் இப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை. இவற்றை இணைக்கும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இயங்கும் "வட்ட பேருந்து' வசதி அவசியம். சொகுசு பஸ்களை இயக்குவதன் மூலம் சுற்றுலா பயணிகள் பயன் பெறுவதோடு, போக்குவத்து கழகத்திற்கும் வருவாய் கிடைக்கும். இப்பகுதியினருக்கும் கூடுதல் போக்குவரத்து வசதி ஏற்படும். மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து கழகத்தினர் இதை பரிசீலிக்க வேண்டும் என எதிர் பார்ப்பு நிலவுகிறது.


source : Dinamalar