Nagaratharonline.com
 
NEWS REPORT: நாம் அனைவருமே நுகர்வோர்தான்  Jun 19, 10
 
பிராக்டிகலாகப் பார்த்தால் நாம் அனைவருமே நுகர்வோர்தான்! பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம்; அல்லது கட்டணம் செலுத்தி ஒரு சேவையைப் பெறுகிறோம். அப்படி நாம் வாங்குகிற பொருளிலோ, சேவையிலோ குறைபாடு இருக்குமானால் நாம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். நாம் வாங்கும் பொருளோ, சேவையோ, நம் சொந்த உபயோகத்துக்காக இருக்கு மானால், நாம் நுகர்வோர்தான் என்கிறது சட்டம். வணிக நோக்கத்துக்காகவோ, மறு விற்பனைக்காகவோ வாங்கு கிறவர், நுகர்வோர் என்ற வரையறுக்குள் வர மாட்டார்.

வழக்கு போட வேண்டுமா?

குற்றவியல் நீதிமன்றம், சிவில் நீதிமன்றம் ஆகியவற்றி லிருந்து நுகர்வோர் நீதிமன்றம் மாறுபட்டது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிற வழக்குகளை மட்டுமே நுகர்வோர் நீதிமன்றத்துக்குக் கொண்டு போக முடியும். இதற்காகவே ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலங்களில் அனைத்து மாவட்டங் களில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களை ஏற்படுத்தி உள்ளன. பொதுவாக பதவியில் இருக்கும் அல்லது ஓவு பெற்ற நீதிபதி ஒருவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலை வராகவும், இன்னும் இரு உறுப்பினர்களும் மாவட்ட மன்றத்தில் இருப்பார்கள். அதே போல பணியிலிருக்கும் அல்லது ஓவு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியைத் தலைவ ராகக் கொண்டு மாநில அளவில் மாநில நுகர்வோர் ஆணையம் அமையும். இதன் அடுத்த கட்டம் தேசிய அளவிலான நுகர்வோர் ஆணையம் இதன் தலைவராக, பணியில் உள்ள அல்லது ஓவு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார். அவரைத் தவிர நான்கு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

வழக்குக்கான பணம்...

மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட வேண்டும் என்றால் அதிக பட்சமாக ஐந்நூறு ரூபா கட்டினால் போதும்; மாநில, தேசிய கன்ஸ்யூமர் கோர்ட்கள் என்றாலும் கட்டணம் மிகவும் குறைவுதான். மாநில கன்ஸ்யூமர் கோர்ட் என்றால் நான்காயிரம் ரூபா வரை கட்ட வேண்டும். தேசிய ஆணையம் என்றால் ஐந்தாயிரம் வரை கட்டணமிருக்கும்.

எங்கே வழக்கு போட வேண்டும்?

இருபது லட்சம் மதிப்பு வரையிலான மதிப்பு கொண்ட பொருள்கள் அல்லது சேவை அல்லது கேட்கும் நஷ்ட ஈடு இருக்குமானால், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இருபது லட்சம் ரூபா மதிப்புக்கு மேல் ஒரு கோடி ரூபா வரை என்றால் மாநில நுகர்வோர் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதற்கு மேல் என்றால் தேசிய நுகர்வோர் ஆணையத்துக்குப் போக வேண்டியதுதான்.

எங்கே வழக்கு போட வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சோல்லப்பட்டிருக்கிறது. எதிர் மனு தாரரின் வணிக அலுவலகம் எந்த மாவட்டத்தின் எல்லைக்குள் உள்ளதோ அல்லது வழக்கின் ஆதாரம் எந்த மாவட்டத்தில் துவங்கியதோ அந்த மாவட்டத்தின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும். மனு, ஏற்றுக் கொள்ளப்பட்ட இருபத்தொரு நாட்களுக்குள் புகார் மனு எதிர் மனுதாரருக்கு அனுப்பி வைக்கப் படும். எதிர்மனுதாரர், முப்பது நாட்களுக்குள் தன் தரப்பு பதிலைத் தாக்கல் செய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடும். அதன்படி நீதிபதி வழக்கினை உரிய முறையில் விசாரித்து, தீர்ப்பு வழங்குவார்.

நுகர்வோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்; வழக்கு செலவுக்கான தொகையைக் கொடுக்க வேண்டும்; அவருக்கு ஏற்பட்ட குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு அமையலாம். சில சமயங்களில் சில புகார்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராது;


source : Mangaiyar malar