Nagaratharonline.com
 
தமிழ் படித்தவர்களுக்கு தமிழுணர்வு வேண்டும்: அமைச்சர் பொன்முடி  Jun 17, 10
 
காரைக்குடி, ஜூன் 16: கடலுக்கு அடியில் எண்ணெய்க் கிணறு குறித்து தினமணியின் தலையங்கத்தை சுட்டிக் காட்டிய பொன்னம்பல அடிகளார், தினமணியை கொடுத்து அமைச்சரையும் வாசிக்க வைத்து ஆங்கிலத்திலும் பேசினார்.


இந்த மாநாட்டைத் தொடக்கி வைப்பதற்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வந்தார். அவர் வரும்போது தினமணி நாளிதழையும் கொண்டுவந்து தொடக்க உரையில் தினமணியின் புதன்கிழமை தலையங்கத்தை சுட்டிக் காட்டிப் பேசியது:


இந்த நவீன யுகத்தில் தொழில்நுட்பம், கச்சாப்பொருள்கள், பணமுதலீடு இவை மூன்றும் ஒருங்கிணைந்து பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பருவநிலை மாற்றம் குறித்து இங்கே மாநாடு நடத்துகிற வேளையில் இன்றைய தினமணி நாளிதழில் தீட்டப்பட் டுள்ள தலையங்கத்தை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.


இன்றைக்கு வளர்ந்த நாடுகளால் ஏற்படும் ஆபத்தைக் குறிப்பிட்டும், மெக்சிகோ வளைகுடாவில் பிபி என்ற எரிசக்தி நிறுவனம் கடலுக்கடியில் எண்ணெய்க் கிணறு கிடைக்கிறதா என்பதற்காக துளையிடும்போது கடலுக்கடியில் எண்ணெய்க் கிணறு வெடித்துச் சிதறி கச்சா எண்ணெய் பீச்சி அடிக்கக் கடலெல்லாம் பிசுபிசுப்பு ஏற்பட்டு கடல் உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.


60 நாள்களாகியும் அதனை சரி செய்ய முடியவில்லையே என்று கவலை தெரிவித்த பொன்னம்பல அடிகளார், எரிசக்தி தேவைக்கு சூரிய ஆற்றல் பயன்பாடு பரவலாக்கப்பட வேண்டும்.


இந்தியாவையும், சீனாவையும் புவி வெப்பமயம் பயமுறுத்தி வருகிறது. சூரிய ஆற்றலைப் பயன்படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசுபடாது. அதற்கு செலவு குறைந்த ஆற்றல்களை உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உதவிகளை வளர்ச்சி அடைந்த நாடுகள் வழங்க வேண்டும் என்றார்.

Source:Dinamani