Nagaratharonline.com
 
திருப்புத்தூர் தாலுகா மக்கள் தொகை கணக்கெடுப்பு  Jun 7, 10
 
திருப்புத்தூர் தாலுகாவில் 400 அலுவலர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 45 நாட்கள் இப்பணி நடக்கவுள்ளது. ஒரு கணக்கெடுப்பாளருக்கு 700 பேர் அல்லது 150 வீடுகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதில், வீட்டில் உள்ளோர் 37 கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தான், மக்கள் தொகை; அவை சார்ந்த விபரங்களை துல்லியமாக பதிவாகும். வீட்டில் உள்ளோர் இதை பொறுப்புடன் கையாள வேண்டும். பெயர், முகவரி, பிறந்த நாள், ஆண், பெண் விபரம், உள்ள பொருட்கள், வசதிகள் போன்றவற்ø, ஒரு தாளில் எழுதி வைத்திருக்க வேண்டும். கடந்த 2001 கணக்கெடுப்பில், தாலுகாவின் மக்கள் தொகை 2 லட்சத்து 40 ஆயிரத்து 44; திருப்புத்தூர் பேரூராட்சியில் 29 ஆயிரத்து 354; சிங்கம்புணரியில் 16 ஆயிரத்து 415; நெற்குப்பையில் 5, 691. தற்போது 5 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

source ; Dinamalar