Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை : கம்பன் கழகம் சார்பில் முதல் மாதச் சொற்பொழிவு துவக்கம்  Jun 7, 10
 
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கம்பன் மணிமண்டபத்தில் சனிக்கிழமை முதல் மாத சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

தாய்க்கழகமான காரைக்குடி கம்பன் கழகம் ஆண்டுதோறும் கம்பன் திருநாள் விழா வை காரைக்குடியில் 3 நாள்களும், நாட்டரசன்கோட்டை கம்பன் சமாதியில் ஒரு நாளும் என பங்குனி மாதத்தில் நடத்தி வருகிறது.

கடந்த விழாவின் போது கம்பனின் தமிழ் இனி மாதந்தோறும் கம்பன் சொற்பொழிவாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சி மாலை 6 மணிக்குத் தொடங்கியது.

காரைக்குடி கம்பன்கழகச் செயலர் பழ. பழனியப்பன் வரவேற்றார். திருச்சி கம்பன் கழகச் செயலர் இரா. மாது கம்பனில் விழுப்பொருள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

அதைத்தொடர்ந்து காரைக்குடியைச்சேர்ந்த புலவர் ஆ. பழநி, கம்பனின் இராவணன் என்ற தலைப்பிலே சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கம்பன் கழக அறங்காவலர் மெய்யப்பன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் பெரியணன். கவிஞர்கள் அரு.நாகப்பன், ஜனநேசன், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


source : Dinamani