Nagaratharonline.com
 
கோட்டையூர் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கதவு- ஜன்னல் திருட்டு: பட்டப்பகலில் கொள்ளையர்கள் அட்டூழியம்  Jun 2, 10
 
காரைக்குடி, மே. 30-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது கோட்டையூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் வள்ளியப்ப செட்டியார். தொழிலதிபரான இவர் தற்போது அதே ஊரில் வேறொரு பகுதியில் புதிய வீடு கட்டி தனது குடும் பத்தினருடன் வசித்து வருகிறார். ஏற்கனவே தான் வாழ்ந்து வந்த பழைய வீட்டை பல ஆண்டுகளாக பூட்டி வைத்துள்ளார்.

பழமையான அந்த வீட்டில் உள்ள கதவு, ஜன்னல்கள் மற்றும் வாசல் நிலைகள் அனைத்தும் விலை உயர்ந்த மரத்தால் கலைநயம் மிகுந்த வேலைபாடுகளுடன் அமைக்கப்பட்டு இருந்தது. பல லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை தன்னுடைய எதிர்கால சந்ததியினருக்காக வள்ளி யப்ப செட்டியார் பாதுகாத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வள்ளியப்ப செட்டியாரின் பழைய வீட்டுக்குள் புகுந்த “மர்ம” நபர்கள் அங்கிருந்த ஜன்னல்களை திருடி சென்று விட்டனர். அதன் பிறகும் வள்ளியப்ப செட்டி யார் அந்த வீட்டிற்கு செல்லாததால் திருட்டு சம்பவம் நடந்தது அவருக்கு தெரியாமலே போனது. இதனால் கொள்ளையர் களுக்கு மிகுந்த தைரியம் ஏற்பட்டது.

நேற்று காலை மீண்டும் அங்கு வேனில் வந்த கொள்ளையர்கள் சிலர் எந்தவித ஆராவாரமும் இன்றி வள்ளியப்ப செட்டி யாரின் பழைய வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அங்கி ருந்த கதவு நிலைகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகிய வற்றை பெயர்த்து எடுத்து சென்றனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர்கள் வள்ளியப்ப செட்டியாருக் கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பள்ளத் தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரைக்குடி அண்ணாநகரை சேர்ந்த தர்மலிங்கம், வேன் டிரை வர் அன்பு ஆகிய இரு வரையும் கைது செய்த னர். தலைமறைவான கொள்ளையன் ராஜாவை தேடிவருகின்றனர்.

இதே போல் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆள் இல்லாத வீட்டில் கிரீல் கேட்டுகள் கொள்ளை போவது இன்று வரை தொடர்கதையாகி வருகிறது.

Source:Maalaimalar