Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல்  Jan 20, 23
 
நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் மன்ற தலைவர் அ.புசலான் தலைமையில் நடந்தது.

செயல் அலுவலர் கணேசன் புகையில்லா பொங்கல் குறித்து பேசினார். நகர் பகுதிகளில் குப்பைகளை கொட்டவோ, எரிக்கவோ மாட்டோம், பிளாஸ்டிக் இல்லா பேரூராட்சியாக மாற்றுவோம், நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவோம், மின்சார கழிவுகளை பிரித்து எடுத்து ஒப்படைப்போம், நீர் வரத்து கால்வாய் பகுதிகளில் கழிவுகளை கொட்ட மாட்டோம், பசுமை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிப்போம், வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிப்போம், மண்வளத்தை காப்போம், நோய் தொற்று பரவாமல் இருக்க காய்ச்சிய நீரை பருகுவோம், துணி பைகளை பயன்படுத்துவோம், மழை நீரை சேகரிப்போம், குப்பைகள் இல்லா தூய்மையான பேரூராட்சியாக மாற்றுவோம் போன்ற உறுதிமொழிகளோடு புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதில் மன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.