Nagaratharonline.com
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க 31- ஆம் ஆண்டு விழா  Jan 20, 23
 
 
சென்னை வாழ் நெற்குப்பை நகரத்தார் சங்க 31- ஆம் ஆண்டு விழா

8/!/023, ஞாயிறு காலை, சென்னை மயிலாப்பூர் வித்யா பாரதி கல்யாண மண்டபம்...
காலை 8 மணிக்கே கலகலக்கத் துவங்கியது. ஏராளமான ஸ்டால்கள், வண்ண வண்ண தோரணங்களும், பலூன்களும் ஜொலித்தன
காலை 8.30 மணிக்கு, பிஞ்சுக்குழந்தைகள் துவங்கி, மேல்நிலைப்பள்ளி வரையிலான மாணவர்களுக்கு பல விளையாட்டு போட்டிகளும், திருமணமான செட்டியார்களுக்கு, அறிவோமா நம் பகுதி- அறிவுத்திறன்சரிப்படவில்லை.பெண்களுக்கு பாட்டிலில் வர்ணஜாலம் போட்டியும், தனித்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டது..

காலை சரியாக 10 மணிக்கு ஆண்டு விழா நிகழ்வுகள்
.... தலைவர் பெரி.சுந்தர் அழகுத் தமிழில் அருமை நடையில் வரவேற்க, செயலாளர் ராமனாதன் லெட்சுமணன், மிக நேர்த்தியாக ஆண்டறிக்கை வாசிக்க, பொருளாளர் சு.சீனிவாசன் ஆண்டுக்காண்டு கூடும் நிதி நிலை சமர்ப்பிக்க, ஐ.டி, பொறியியல் படிக்கும் சங்க உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு பணிக்குப்பின் திருப்ப கட்டும் ஆண்டுதோறும் சுமார் ஒன்றரை லட்ச நிதியளிப்பினை, கல்வி நிதி அறிக்கையாக ந. முத்துக்கருப்பன் வாசிக்க,
சிறந்த மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசும், குரோம்பேட்டை நகரத்தார் மாளிகை கட்டிட நிதிக்கு, ஐந்து லட்சமும் சங்கத்தின் சார்பில், சங்க நிர்வாகிகளுடன் வழங்கி, தலைமை உரையாற்றிய, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், அரு லெ. சுந்தரேசன் நெற்குப்பை சிறப்புகளை நினைவுகூர்ந்து நல்ல செயல்பாடுடய சங்கமாக நெற்க
குப்பை நகரத்தார் சங்கம் திகழ்வதையும் நிர்வாகிகளுடய ஈடுபாடுடன் கூடிய செயல்பாடுகளையும் மனம் திறந்து பாராட்டினார்..

செட்டிநாடு மருத்துவமனை இதய நோயியல் துறை துறைத் தலைவர், பேராசிரியர், டாக்டர் மெ. சொக்கலிங்கம் பாராட்டுப் பெற்றார். தொடர்ந்து "இதயம் அறிவோம்" உரையில் இதயத்தின் அமைப்பு சுருங்கி விரியும் செயல்பாடு, குருதியை உடல் முழுதும் ஓடச்செய்தும், சுத்தப்படுத்துவதையும் விளக்கி, மிகச்சிறந்த மருந்து, நடைப்பயிற்சி என்றார். 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 10000 ஸ்டெப்பும், 60 ஐத் தாண்டியவர்கள் ஒரு நாளைக்கு 6000 ஸ்டெப்பும் நடக்க வேண்டும் என்றார். லிப்ட் தவிர்க்க வேண்டும் என்று சொன்ன டாக்டர், தன் பணியாற்றும் மருத்துவமனையில் மேல் தளங்களுக்குச் செல்ல லிப்ட் வசதி உண்டு, ஆனால் நான் பெரும்பகுதி படியேறிச்செல்வேன், ஒரு முறை அங்குள்ள பணியாளர் லிப்டில் போனால் சீக்கிரம் மேலே போகலாம் என்றார்
சீக்கிரம் மேலே போகக்கூடாது என்பதற்காகத்தான் "லிப்ட்" தவிர்க்கிறேன் எனச் சொன்னார்
ஒரு இடத்திற்கு காரில் சென்றால் முதல் தெருவிலேயே இறங்கி நடங்கள்,
கார் நிறுத்தும் இடத்தில் தூரமாக காரை விட்டு விட்டு நடந்து வாருங்கள், அன்றைக்கு நம் வீடுகள் முகப்பு, வளவு, முதல் இரண்டாம் கட்டு, சமையல் அறை என நடைப்பயிற்
சிக்கு ஏற்ற காலமாக இருந்தது என்றார்

ஸ்டிரஸ், மனக்குழப்பம் இதயநோய்க்கு வழிவகுக்கும் என்றார்.
குறைத்து சம்பாதித்து நிறைய அறம் செய்யுங்கள் என்பதை குறைத்து சாப்பிட்டு நிறைய உழையுங்கள் என்றார்.
வறுத்தது, பொரித்தது, சில எண்ணை வகைகளை தவிர்ப்பது, இதய நோய் தடுப்பிற்கு உதவும் என்றார்.

தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மேலை பழநியப்பன்" வேல் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்" என்ற தலைப்பில் பேசியபோது
வேல் வழிபாட்டில், பாதயாத்திரை பயணத்தில் முத்திரை பதிக்கும் வித்தக ஊர் "நெற்குப்பை, "தலைவர் குடும்பம் கட்டளைக்காவடிக் குடும்பம் என்பதாலோ என்னவோ மாதமும் மார்கழி நிறைவு தை துவக்கம் என்பதால் வேலவனாம் முருகனுடய சிறப்பையும் அவனுடய நீண்டு அகன்று சுருங்கி "வெவ்வினைகளை வேரறுக்கும் வேலின் சிறப்பை சிந்திக்கச் சொல்லியுள்ளார்கள். செட்டிமகன் கப்பலுக்கு செந்தூரான் துணை என கொண்டுவிக்கப்போன மூதாதையர்கள்,
சிறுகூடற்பட்டியிலே பிறந்து சிகாகோ வரை சென்று காலத்தால் அழியாத காவியம் படைத்து மாட்டுவண்டி நுழையாத இடங்களிலெல்லாம் பாட்டுவண்டி ஓட்டிய கவிஞன்,
உலகெங்கும் நகரத்தார் கட்டிய கோயில்கள் அதிகம்
அதிலும் முருகன் கோயில்களே அதிகம் என்பான்
காரணம் கந்தனின் அருளும் அவள் கை வேல் ஆற்றலும் அத்தனை சிறப்பானது,
சிக்கலில் அன்னையிடம் வேல் பெறும் காட்சி,
சூரசம்ஹார விழாவில் தாரகாசுரன், சிங்கமுகாசுரன் சூரபத்மன் என களம் கண்டு "வேலால் "சம்ஹாரம் செய்து வேல், ஆகாய கங்கை நீராடி முருகன் கைவந்துசேரும் காட்சி மாட்சிமை மிக்கதல்லவா?
நம் குழந்தைகளை நாமும் தினம் தோறும் "சிவபுராணம்" "கந்தர் சஷ்டி கவசம்" படிக்கப் பழக்க வேண்டும் இரண்டுமே விரைந்து படித்தால் 12 நிமிடம்தான் ஆகும். கந்தர் சஷ்டி கவசம் முழுதும் நிறைந்து இருப்பது "வேல்" சிறப்பாகும். கந்தர் சஷ்டி கவசம் தொடர்ந்து படித்தால் நல்ல பேச்சுநடை, குரல்வளம், நினைவாற்றல், உச்சரிப்பு, தடுமாற்றம் நீங்குதல் என பல சிறப்புகளைத் தருவதோடு, உடல்பாகங்கள் வரும் நோய்கள் தீர்க்கும் "வேல்" என சிறப்புமிக்கது. கந்தர் சஷ்டி கவசம்
வேல் வழிபாடு ஞானசக்தியால் கூரிய அறிவைத்தரும், மன அமைதியையும், ஆற்றலையும், தீர்க்க முடிவெடுக்கும் நிலையையும் தரும்..
வேல் மாட்சி சிறப்பை ஒரு காட்சி மூலம் நன்கு அறியலாம்.

ஒரு சராசரி குடும்ப மனிதர் மருந்துக்கடை நடத்தி வருகிறார்.
அவருடய நெருங்கிய நண்பர் ஒருவர்
மருந்துக்கடைக்காரரிடம் நீ தான் இருபது லட்ச ரூபாய் இருப்பு வைத்திருக்கிறாயே, அதொடு கொஞ்சம் புரட்டி நகை நட்டுகளை விற்று 25 லட்சமாக ஏற்பாடு செய், நான் 25 லட்சம் சேர்த்து 50 லட்சத்தை நண்பரின் தொழில்நிறுவனத்தில் முதலீடு செய்வோம், மாதம் ஒரு லட்ச ரூபாய் வட்டி வரும் உனக்கு 50 ஆயிரம் எனக்கு 50 ஆயிரம் என்றார்
அவரும் கூறியதை ஏற்று சில நகைகளை அதிலும் அவரின் முன்னோர் சேர்த்து வைத்திருந்த தங்கத்தில் வைர, நவரத்தினம் பதித்த சிறு "வேல்" உட்பட விற்று 25 லட்சம் தந்தார்.
நண்பர் புரோநோட்டு தருவதாக சொல்ல நட்பிற்கு அழகல்ல வேண்டாம் என மறுத்துவிட்டார்.
இரண்டு மூன்று மாதம் முதல் வாரத்திலேயே 50 ஆயிரம் வட்டி வந்தது
சோதனையாய் பணம் பெற்றவர் இறந்து போய்விட்டார்.
அவருடய மகனை மெடிக்கல் ஷாப்பில் பார்த்துவட்டி வரவில்லையே?
என்றார்
அவனோ எந்த வட்டி என்றான்?
இவர் பழய நிகழ்வுகளை எடுத்துச் சொல்லி தந்தை பாடம் "வேல்" முதலான நகைகளை விற்று 25 லட்சம் தந்ததைச் சொன்னார்
மகனோ ஏதாவது ரெக்கார்டு இருந்தால் கொண்டு வாருங்கள், இல்லையேல் வராதீர்கள் என எச்சரித்தான்
மருந்துக்கடைக்காரர் மனம் உடைந்துபோனார்
தற்கொலை முடிவெடுத்தார்.
இரயிலில் பாய்வது சரியாகப் படவில்லை, தூக்கில் தொங்குவது அதுவும் சரிப்படவில்லை.
தன் கடையில் 50 தூக்கமாத்திரைகளை பட்டை உரித்து, பொட்டலம் கட்டிக்கொண்டு அருகிருக்கும் மலைக்குச் சென்றார் தடாகத்தில், நீராடி மாத்திரை பத்திரமாக இருக்கிறதா எனப் பார்த்தார்
ஒரு அபலைப்பெண் அவரிடம் தஞ்சமானாள். தன்னை சில சமூக விரோதிகள் துரத்துவதாக கலங்கினாள்.
அவர் ஒரு அசாத்ய சக்தியொடு மிரட்டி, விரட்டிவிட்டு
நீ ஏம்மா இங்கே வந்தே எனக் கேட்டார்,
தன் தந்தை உயிருக்கு போராடுவதாகவும் இம்மலையிருக்கும் ஒரு சித்தரால் மட்டுமே காப்பாற்ற முடியும் எனக் கேள்விப்பட்டு வந்தேன் என்றாள்.
சரி, போ போய் பார் என்றார்
இல்லை நான் போகவில்லை என்னை பஸ் நிறுத்தம் கூட்டிச்சென்று அனுப்பி உதவுங்கள் எனக் கெஞ்சினாள்.
வேறு வழியின்றி அவளை அனுப்ப வந்து நீ யார் என விசாரித்தார்..
அந்த பெண் தன் ஊரைச் சொல்லி தன் தந்தை பெயர் படியளந்தான் என்றதும் ஆச்சரியப்பட்ட அவர்
மேலும் சில விவரங்களைச் சொல்லி ஒன்றாக படித்த நண்பன் என்பதை உறுதிசெய்து வீட்டிற்கு போகிறார்..
அங்கே படியளந்தான் உயிர்போகும் சூழல் நண்பனை கண்டு மூச்சை இழுத்துப் பிடித்தார் .உடன் உயில் மூலம் சொத்துக்கள் அத்தனையையும், தன் பெண்ணிற்கு கார்டியனாகவும் உயில் எழுதினார்
நான் ஒரு பாவி என்றார்
நீயா?ஏன்? எப்படி எனக் கேட்க
வேல்முருகனுக்கு உண்டியலில் செலுத்த கொண்டுபோன பணத்தை மனம் தடுமாறி கொண்டு வந்து முதலீடாக்கி தொழில் செய்தேன் பணம், வசதி, வாய்ப்பு பெருகியது, ஆனால் "வேல்" "வேலாயுதன் "பணமாயிற்றே பாவி ஆகிவிட்டேன் நீ என் பெண்னை திருமணம் செய்து வைத்து ஒரு பகுதி பணம் தந்து ஒரு பெரிய தொகையை வேலவன் உண்டியலிலே செலுத்து எனச் சொல்ல உயிர் போயிற்று. தவறு செய்தவன் திருந்தாதால் இத்தண்டனை
பணத்தை இழந்த மருந்துக் கடைக்காரன் நேர்மையானவர் ஆதலால் வேல் பணம் கிடைக்கச் செய்தது
மருந்துக்கடைக்காரர் மகனோ விரதமிருந்து வேல் வழிபாடு செய்து திருச்செந்தூர் யாத்திரை முடித்து ஊருக்குத் திரும்புகிறான்
பணம் பெற்று இறந்தவரின் மனைவி ஓடோடி வந்து நீங்கள் உன் தகப்பனார் பணம் தந்தது உண்மை தானாம்
இப்போது என் பெயரனுக்கு இதயத்திலே வேல் வடிவில் ஓட்டை ஏற்ப்படுத்தி வேலவன் தவறை உணர்த்திவிட்டான்
மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கொடுக்கிறார்
வேலின் சக்தி, ஆற்றல் தரும் வெற்றி இவற்றிற்கு "துள்ளி வருகுது வேல் என்ற தலைப்பிலான நூலே சாட்சி.
எனவே நாம் எந்த நிலையிலும் உண்மையானவர்களாக வாழ்ந்து வெற்றிதரும் வேல் வழிபாட்டைச் செய்ய வேண்டும் என்றார்..
மூத்த வழக்கறிஞர் பாராட்டு!
உடன் போடியம் எழுந்து வந்த அரு. லெ.சுந்தரேசன்
மிகச் சிறப்பான, அருமையான உரை எனப் பாராட்டினார் நம் சமுதாயம் நிச்சயமாக இந்த வேகமான உலகத்திலும் நம்பிக்கைக்குரிய சமூகமாக விளங்குவதே சாட்சி என்றார்.
ம.வெள்ளையன் அனைவருக்கும் நன்றி கூறினார் மதிய, மாலை விருந்து, ஆத்தங்குடி நளபாகம், கரோக்கி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வாசு முருகப்பன், பழ அடைக்கப்பன் உள்ளிட்ட துணைச்செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் குடும்பத்த்தோடு கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.