Nagaratharonline.com
 
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இரவில் வரும் பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள்  Jul 3, 21
 
சென்னையில் இருந்து காரைக்குடிக்கு இரவில் வரும் பயணிகளுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


சென்னையிலிருந்து தினமும் காரைக்குடிக்கு இரவு 10:30 மணிக்கு பல்லவன் ரயிலும், வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நள்ளிரவு 3:15 மணிக்கு சென்னை செங்கோட்டைக்கு செல்லும் சிலம்பு விரைவு ரயிலும், சென்னை -ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடிக்கு அதிகாலை 4:15 மணிக்கும் வருகிறது.இந்த ரயில்களில் காரைக்குடி வரும் பயணிகளுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அழகப்பா பல்கலை., கல்லுாரிச்சாலை, சுப்பிரமணியபுரம், ஆரியபவன், புதிய பஸ் ஸ்டாண்ட், பெரியார் சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை செல்லும்.