Nagaratharonline.com
 
திருப்பத்தூர் தொகுதி : கண்ணோட்டம்  Mar 25, 21
 
தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 290647, ஆண்கள் 142327, பெண்கள் 148308, மூன்றாம் பாலினத்தவர் 12.

திருப்பத்தூர் தொகுதியில் திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, கானாடுகாத்தான், பள்ளத்தூர் பேரூராட்சிகளும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர், கல்லல், சாக்கோட்டை யூனியன்களும், திருப்பத்தூர், சிங்கம்புணரி, கல்லல், எஸ்.புதூர், சாக்கோட்டை பஞ்சாயத்துக்களும் அடங்கி உள்ளன.

மக்களின் எதிர்பார்ப்பு

திருப்பத்தூர் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வருவது காரைக்குடி- மதுரை ரெயில் போக்குவரத்து திட்டமாகும். இத்திட்டத்திற்காக மத்திய, மாநில அமைச்சர்கள் இடம் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் கோரிக்கையை இன்றளவும் வெறும் கனவாகவே இருந்து வருகிறது.

அதேபோல் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட ஆர்.ஓ. குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது திருப்பத்தூர் நகர மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகும்.

பத்திர பதிவிற்காக நெற்குப்பை பேரூராட்சி சுற்றி உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பக்கத்து மாவட்டமான புதுக்கோட்டையை சேர்ந்த பொன்னமராவதிக்கு சென்று பத்திரபதிவு மேற்கொள்ளும் அவல நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெற்குப்பை பேரூராட்சியிலேயே சார்பதிவாளர் அலுவலகம் அமைத்து தரும்படியான கோரிக்கையும், பஸ் நிலையம் அமைத்து தர வண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில்பேட்டை நகரமாக சிறந்து விளங்கியது சிங்கம்புணரி. நாளடைவில் இங்கு இயங்கிவந்த தொழிற்சாலை இடம் மாற்றப்பட்டதால் அதில் வேலை பார்த்த மக்கள் பலர் வேலை இழக்க நேரிட்டது. எனவே முன்பு போல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டுவரவேண்டும்