Nagaratharonline.com
 
ராயவரத்தில் இன்று தேரோட்டம்  May 18, 10
 
ராயவரம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று (18ம் தேதி) நடக்கிறது.


ராயவரத்தில் நகரத்தார்களுக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 4ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து 10ம் தேதி வைகாசி திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு சமூகத்தினர் மற்றும் நகரத்தார்கள் மண்டகப்படி நடந்தது. தினமும் காலை முத்துமாரியம்மன் வெள்ளி கேடய வாகனத்திலும், இரவு சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.


விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா இன்று(18ம் தேதி) நடக்கிறது. தேர்திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மன் சர்வ அலங்காரத்தில் தேரில் எழுந்தருள்வார். நகரத்தார்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நகரத்தார்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

source : Dinamalar