Nagaratharonline.com
 
நெற்குப்பை பேரூராட்சியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்  Nov 22, 20
 
நெற்குப்பை பேரூராட்சியில் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதன்படி செயல் அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நேர்முக உதவியாளர் துளசிராமன், திருப்பத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி ரூ.5 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது