Nagaratharonline.com
 
தீபாவளி பண்டிகையையொட்டி செட்டிநாடு கைத்தறி கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணி மும்முரம்  Nov 1, 20
 
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் கண்டாங்கி சேலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு செட்டிநாடு கண்டாங்கி சேலைகளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்ததால் இத்தொழில் மக்களிடையே நல்ல அங்கீகாரம் கிடைத்து வரவேற்பை பெற்றுள்ளது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு செட்டிநாடு கண்டாங்கி சேலைகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கைத்தறி பட்டு புடவைகளில் கோர்வை தாழம்பூ ரக பட்டு புடவை மற்றும் உடல் காட்டன் பட்டு ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டு புடவைகளின் எடை 350 கிராம் குறைவாக உள்ளதால் பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கு தயாரிக்கப்பட்ட கண்டாங்கி சேலைகள் டெல்லி, ஐதராபாத், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், சென்னை, கோவை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது