Nagaratharonline.com
 
ஏசியின் குறைந்தபட்ச வெப்பநிலையை 24 - 30 டிகிரி செல்சியஸாக நிர்ணயிக்க அரசு அறிவுரை  Apr 26, 20
 
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ‘இந்திய ஏர் கண்ஷனர் இன்ஜினீயர்ஸ்' சங்கத்தின் சார்பில் விரிவான வழிகாட்டு நெறிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் கரோனா வைரஸ் 14 நாட்களும், 37 டிகிரி செல்சியஸில் ஒரு நாளும், 56 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் வரையும் கரோனா வைரஸ் உயிர் வாழும்.

எனவே, கரோனா வைரஸ் பரவி வரும் இந்த நேரத்தில் வீடு,அலுவலகங்களில் ஏசி வெப்பநிலையை 24 முதல் 30 டிகிரி செல்சியஸாக நிர்ணயிக்கலாம். 'சென்ட்ரல் ஏசியை' தவிர்ப்பது நல்லது.

அறைகளில் ஏர்கூலரை பயன்படுத்தும்போது ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும். ஏர்கூலரில் கண்டிப்பாக ஏர் பில்டரை பொருத்த வேண்டும். ஏர்கூலரின் டேங்கை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும்.

மின்விசிறிகளைப் பயன்படுத்தும்போது ஜன்னல்களை பகுதி அளவு திறந்து வைக்கலாம். அறையில் எக்ஸாஸ்ட் பேன் இருந்தால் அதை இயக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.