Nagaratharonline.com
 
திருப்புத்துாரில் தக்காளி கிலோ ரூ.80: வெங்காயம் கிலோ ரூ.180  Mar 29, 20
 
திருப்புத்துாரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட அறிவிப்பு வெளியான அன்று காய்கறி விலை கடைக்கு கடைக்கு வேறாக இருந்தது. சில கடைகளில் மணிக்கு ஒரு விலையாக அதிகரித்தது.

கடைகளை விட வாரச்சந்தையில் விலை அதிகமாக இருந்தது. பின்னர் நாளாக, நாளாக ஓரளவிற்கு சீரானது.தற்போது திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில் காய்கறி விலை பல மடங்கு உயர்ந்தது. வெங்காயம் கிலோ ரூ.180, தக்காளி கிலோ ரூ.80க்கு விற்றது.