Nagaratharonline.com
 
100 ஆண்டுகளுக்கும் மேல் பராமரிக்கப்பட்டு வரும் குடிநீர் செட்டியார் ஊரணி  Mar 22, 20
 
கானாடுகாத்தான் பேரூராட்சி பழையூர் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் ஊரணியைப் பொதுமக்கள் கண்ணின் இமைபோல் பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

செட்டிநாடு என்றாலே பல வகை சிறப்பு உண்டு. இப்பகுதியில் கோயில்கள் அதிகம். கோயில்களின் முன்பாக குளங்களும் நிறைந்து காணப்படுகின்றன. கானாடுகாத்தான் செட்டிநாடு பாரம்பரிய சுற்றுலா நகரமாக திகழ்கிறது. இந்த ஊர் வாஸ்து சாஸ்திர அமைப்பின்படி குடிநீர் குளங்கள், குடிநீர் ஊரணிகளை அன்றைய நகரத்தார்கள் ஏற்படுத்தியிருப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். அப்படி அமைந்திருப்பதுதான் அவ்வூரின் வடகிழக்குப் பகுதியான பழையூர் கிராமத்தில் உள்ள செட்டியார் ஊரணி. இந்த ஊரணி சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலானவை. ஊரணியை அமைத்து பொதுமக்கள் குடிநீருக்கும், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவையையும் பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

குடிநீர் ஊரணியை பொதுமக்களும், பேரூராட்சி நிர்வாகத்தினரும் இணைந்தே பராமரிக்கின்றனர்.