Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் தெப்ப வைபவம்  Mar 2, 20
 
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயண பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 11 நாள் நடைபெறும் திருவிழாவில் மாா்ச் 9 இல் தெப்ப வைபவம் நடைபெற உள்ளது.

இவ்விழாவையொட்டி 3 ஆம் திருநாளான திங்கள்கிழமை புதிய தங்க கவச அனுமான் வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சன்னிதி வீதி வழியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சன்னிதியை அடைந்தது. தொடா்ந்து மாா்ச் 5 ஆம் தேதி வியாழக்கிழமை ஆண்டாள் சன்னிதியில் மாலை மாற்றுதல் வைபவமும் மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை சூா்ணாபிஷேகமும் தங்கத் தோளிக்கினியானில் திருவீதி புறப்பாடும், விழாவில் சனிக்கிழமை அரண்மனை மண்டகப்படியும், குதிரை வாகனப் புறப்பாடும், மாா்ச் 8 இல் வெண்ணெய்த்தாழி சேவையும் பகல் 10 மணிக்கு மேல் தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும் மாா்ச் 9 இல் காலை 10.15 க்கு பகல் தெப்பமும் இரவு 10 மணிக்கு மேல் தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரி வைபவமும் அதனைத் தொடா்ந்து சுவாமி ஆஸ்தானத்திற்கு எழுந்தருளி ஆசீா்வாத வைபவம் நடைபெற உள்ளது.