Nagaratharonline.com
 
பலவான்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வரும் மாா்ச் 5 -ஆம் தேதி கும்பாபிஷேக விழா  Feb 24, 20
 
பலவான்குடி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வரும் மாா்ச் 5 -ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

குன்றக்குடியின் வடகிழக்கே அமைந்திருக்கும் பலவான்குடியில் நகரத்தாா்கள் நிா்வாகத்தில் உள்ள இக்கோயில் 152 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு புதிய 5 நிலை ராஜ கோபுரத்துடன் வா்ணம் தீட்டப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்தது.மாா்ச் 5-இல் இக்கோயிலில் நடைபெறவுள்ள 9-ஆவது கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் அன்றைய தினம் செட்டியாா் ஊருணி மேல்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ குமர விநாயகா் (மாப்பிள்ளை விநாயகா்) கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் மாா்ச் 2 -ஆம் தேதி காலையில் பூா்வாங்க பூஜைகள் தொடங்கி மாலையில் முதல் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பிள்ளையாா்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரிகள் பங்கேற்கும் ஆறாம் கால யாக பூஜைகள் மாா்ச் 5 ஆம் தேதி காலை 7.35 மணிக்கு நிறைவுற்று கடம் புறப்பாடு நடைபெறும். காலை 8.30 மணிக்கு ராஜகோபுரம், விமானம் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 11 மணிக்கு மகாஅபிஷேகமும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 10.30 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத்தலைவா் சுப.சிதம்பரநாதன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்