Nagaratharonline.com
 
பூலாங்​கு​றிச்சி மலை​யில் குவாரி அமைக்க வரு​வாய்த் துறை​யி​னர் தடை  May 13, 10
 
திருப்​பத்​தூர்,​மே 12:​ ​ பூலாங்​கு​றிச்சி மலை​யில் புரா​தன கல்​வெட்​டு​கள் அமைந்​துள்ள மலை​யில் குவாரி அமைக்க வரு​வாய்த் துறை​யி​னர் தடை விதித்​துள்​ள​னர்.​

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ திருப்​பத்​தூர் அருகே பூலாங்​கு​றிச்​சி​யில் கி.பி.5-ம் நூற்​றாண்​டைச் சேர்ந்த புரா​தன கல்​வெட்​டு​கள் உள்ள மலைத்​தொ​டர் உள்​ளது.​ இதில் டாமின் அனு​ம​தித்​துள்​ள​தா​கக் கூறி கீழ​வ​ளை​வைச் சேர்ந்த சிலர் குவாரி அமைக்க ஆயத்​தப் பணி​க​ளில் ஈடு​பட்டு வந்​த​னர்.​ இதற்​குப் பூலாங்​கு​றிச்சி ஊராட்​சி​மன்​றத்​தி​னர் எதிர்ப்​புத் தெரி​வித்​த​னர்.​

​ ​ ​ புரா​த​னக் கல்​வெட்​டு​கள் உள்ள மலை​யில் குவாரி நடத்த அனு​ம​திக்​கக் கூடாது என்று கோரிக்கை விடுத்​தி​ருந்​த​னர்.​ மாவட்ட ஆட்​சி​யர் உத்​த​ர​வின்​பே​ரில்,​​ தேவ​கோட்டை கோட்​டாட்​சி​யர் அண்​ணாத்​துரை குவாரி அமைப்​பது குறித்து ஆய்வு நடத்த உத்​த​ர​விட்​டார்.​ அதன்​பே​ரில் புதன்​கி​ழமை ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.​

​ ​ ​ மலைப்​ப​கு​தியை வரு​வாய் ஆய்​வா​ளர் சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ கிராம நிர்​வாக அலு​வ​லர் ​இளங்கோ ஆகி​யோர் பார்​வை​யிட்டு,​​ அங்கு நடந்​தி​ருந்த ஆயத்​தப்​ப​ணி​கள் மேலும் தொட​ரா​மல் இருக்​கத் தடை​வி​திக்​கப்​பட்​டுள்​ள​தாக அறி​வித்​த​னர்.​

​ ​ கிரா​மத்​தி​ன​ரி​டம்,​​ யாரும் குவா​ரிப் பணி​க​ளில் ஈடு​பட்​டால்,​​ அதைத் தடுத்து வரு​வாய்த் துறை​யி​ன​ருக்​குத் தக​வல் தெரி​விக்​கு​மா​றும் அவர்​கள் கேட்​டுக்​கொண்​ட​னர்.

Source:Dinamani
May 12