Nagaratharonline.com
 
காரைக்​குடி கொப்​பு​டைய நாயகி அம்​மன் கோயில் பெருந்​தி​ரு​விழா இன்று தொடக்​கம்  May 12, 10
 
காரைக்​குடி,​​ மே 10: சிவ​கங்கை மாவட்​டம்,​​ காரைக்​குடி அருள்​மிகு கொப்​பு​டைய நாயகி அம்​மன் கோயில் செவ்​வாய்ப் பெருந்​தி​ரு​விழா செவ்​வாய்க்​கி​ழமை ​( மே 11) மாலை காப்​புக்​கட்​டு​த​லு​டன் தொடங்​கு​கி​றது.​ ​ மே 18-ல் தேரோட்​டம் நடை​பெ​று​கி​றது.​

​ ​ ​ ​ இந்த ஆண்டு செவ்​வாய்க்​கி​ழமை மாலை 6.26 மணிக்கு மேல் ​ காப்​புக்​கட்​டு​த​லு​டன் விழாத் தொடங்​கு​கி​றது.​ அன்று இரவு அம்​மன் வெள்ளி சிம்ம வாக​னத்​தில் எழுந்​த​ரு​ளும் திரு வீதி​யுலா நடை​பெ​று​கி​றது.​

​ ​ அதைத்​தொ​டர்ந்து புதன்​கி​ழமை ​(மே 12) காம​தேனு வாக​னத்​தி​லும்,​​ வியா​ழக்​கி​ழமை ​(மே 13) அன்ன வாக​னத்​தி​லும்,​​ வெள்​ளிக்​கி​ழமை ​(மே 14) கைலாச வாக​னத்​தி​லும்,​​ சனிக்​கி​ழமை ​(மே 15) வெள்ளி ரதத்​தி​லும்,​​ ஞாயிற்​றுக் கிழமை ​(மே 16) வெள்ளி ரிஷப வாக​னத்​தி​லும்,​​ திங்​கள்​கி​ழமை ​(மே 17) வெள்​ளிக்​கு​திரை வாக​னத்​தி​லும் அம்​மன் எழுந்​த​ரு​ளும் திரு​வீ​தி​யுலா நடை​பெ​றும்.​

​ ​ நாள் தோறும் காலை நேரத்​தில் வெள்​ளிக்​கே​ட​கத்​தில் அம்​பாள் புறப்​பா​டும் பக்தி உலா​வும் நடை​பெ​றும்.​

​ ​ எட்​டாம் திரு​நா​ளான செவ்​வாய்க்​கி​ழமை ​(மே 18) தேரோட்​டத்​தை​யொட்டி காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்​குள் திருத்​தே​ருக்கு அம்​மன் எழுந்​த​ரு​ளும் நிகழ்ச்சி யும்,​​ மாலை 5 மணிக்கு பக்​தர்​கள் திருத்​தேர் வடம்​பி​டித்​தல் நிகழ்ச்​சி​யும்,​​ அதைத் தொடர்ந்து தேரோட்​டம் நடை​பெற்று இரவு அருள்​மிகு காட்​டம்​மன் கோயி​லுக்கு எழுந்​த​ரு​ளல் நிகழ்ச்​சி​யும் நடை​பெ​றும்.​

​ ​ புதன்​கி​ழமை ​(மே19) தேர் கொப்​பு​டை​யம்​மன் கோயி​லுக்​குத் திரும்​பு​த​லும்,​​ வியாக்​கி​ழமை ​(மே 20) இரவு தெப்​பத்​தி​ரு​வி​ழா​வும் நடை​பெற்று விழா நிறை​வ​டை​கி​றது.​

​ ​ ​ ​ விழா ஏற்​பா​டு​களை தக்​கார் சி.செல்​வ​ராஜ்,​​ செயல் அலு​வ​லர் எம்.பூமி​நா​தன் மற்​றும் விழாக்​கு​ழு​வி​னர் செய்து வரு​கின்​ற​னர்.

Article Source:DInamani