Nagaratharonline.com
 
புதுக்கோட்டை அருகே அடகு கடை ஊழியர் அடித்து கொலை ரூ. 16 லட்சம் தப்பியது  May 12, 10
 
திருமயம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள குருவி கொண்டான்பட்டியில் நகை அடகு கடை நடத்தி வருபவர் வள்ளியப்பன். இவரது கடையில் சிவகங்கையை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 70) என்பவர் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 1 வருடமாக படையிலேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அங்கேயே ரவிச்சந்திரன் தங்கினார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக கடையை திறந்து ரவிச்சந்தி ரன் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர். மேலும் கடை கதவு லேசாக திறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர்.

கடை உள்ளே சென்று பார்த்த போது ரவிச் சந்திரன் ரத்த வெள்ளத்த்¤ல் பிணமாக கிடந்தார். இதுபற்றி பனையாப்பட்டி போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நகை களை கொள்ளை அடிக்க வந்த கும்பல் ரவிச் சந்திரனை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி, கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் அடகு கடை உரிமையாளர் வள்ளியப்பன் கடைக்கு வந்தார். அப்போது கடை லாக்கரில் இருந்த ரூ. 16 லட்சம் மதிப்புள்ள நகைகள் பத்திரமாக இருந்ததை கண்டு போலீசாரிடம் தெரிவித்தார்.

இநத சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

அடகு கடையில் ஊழியர் ரவிச்சந்திரனை கொன்ற கும்பல் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார். நகைக்காக கொள்ளையர்கள் கொன்றார்களா அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Article Source:Maalaimalar