Nagaratharonline.com
 
காரைக்குடி --- திருவாரூர் ரயில் நேரம் மாற்றம்  Oct 2, 19
 
காரைக்குடி முதல் திருவாரூர் வரை ஓடும் 'டெமோ' ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி திருவாரூரில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு பகல் 12:30 மணிக்கு காரைக்குடி வந்துசேரும். மறுமார்க்கத்தில் அன்று பகல் 2:15 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும். அன்று இரவு 9:15 மணிக்கு செல்லும். இது நாள் வரை 6:30 மணி நேரத்தில் காரைக்குடி - திருவாரூர் சென்ற ரயில், இனி 7:00 மணி நேர பயண நேரமாக அதிகரிக்கும். இதனால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.