Nagaratharonline.com
 
திருக்கோஷ்டியூர் மாசித்தெப்ப உற்ஸவம்  Feb 20, 19
 
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசி தெப்ப திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.இக்கோயிலில் பிப்.,10ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

தினசரி காலை மற்றும் இரவில் பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்தது. பிப்.,15ல் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், பிப்.,17 ல் சூர்ணாபிேஷகம் நடந்தன. நேற்று முன்தினம் காலை பெருமாள் வெண்ணெய்தாழி சேவை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.காலை 7:15 மணிக்கு பெருமாள் தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் கோயிலிலிருந்து புறப்பாடாகி, தி.வைரவன்பட்டியிலுள்ள ஜோசியர் தெப்பக்குளக்கரை வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் பெருமாளை தரிசித்தனர். காலை 11:50 மணிக்கு தெப்பம் எழுந்தருளினார். தெப்ப குளத்தைச் சுற்றிலும் கூடியிருந்த பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் மீண்டும் தெப்பத்திலிருந்து தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளினார். இரவில் மீண்டும் தெப்பம் நடைபெற்றது.