Nagaratharonline.com
 
சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் முன்பதிவு  Feb 17, 19
 
சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் முன்பதிவு காரைக்குடியில் தொடங்கியது.சென்னை - செங்கோட்டை சிறப்பு விரைவு ரயில் விடுமுறை (வண்டி எண்.06011/06012) மீண்டும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து மே மாதம் வரை இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.எழும்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு காலை 3:43 மணிக்கு வந்தடைகிறது. சிவகங்கைக்கு 4:23-க்கும், மானாமதுரைக்கு 4:55 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 9:50 மணிக்கும் சென்றடைகிறது.மறு மார்க்கத்தில் செவ்வாயன்று செங்கோட்டையிலிருந்து மாலை 4:15 மணிக்கு கிளம்பி சிவகங்கைக்கு இரவு 8:28-க்கும், காரைக்குடிக்கு 9:13-க்கும் வந்தடைகிறது. சென்னைக்கு காலை 5:45 மணிக்கு சென்றடைகிறது. இதற்கான முன்பதிவு காரைக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது