Nagaratharonline.com
 
NEWS REPORT: வண்ண வண்ண விளக்குகளால் மின்னுது அரசு பஸ்  Feb 5, 19
 
 
அரசு பஸ் என்றாலே மெதுவாக செல்லும், பாடல் கேட்க முடியாது, உடைந்தவையாக இருக்கும் என்ற எண்ணம் தான் மக்களிடையே உள்ளது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தேவகோட்டையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்தை அழகுபடுத்திய ஓட்டுனர்கள் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. ஓட்டுனரை பாராட்டிய தமிழக அரசு சிறப்பு பரிசையும் வழங்கியது. தற்போது அதே வழித்தடத்தில் இயக்க புதிய பேருந்து வழங்கப்பட்டுள்ளது. பஸ்சை அழகுபடுத்திக்கொள்ள அதிகாரிகள் சம்மதம் தெரிவித்ததால் முருகேசன்,ரங்கராஜ், முத்துச்சாமி, பாரதிதாசன் ஆகியோர் தினமும் பேருந்தை கழுவினர்.

பஸ்சில் கண்ணை கவரும் ஒளி விளக்குகள்,வண்ணத்துணியால் ஆன திரை, ஜல்லிக்கட்டு குறித்த ஸ்டிக்கர்கள் என புதிய பேருந்தை அழகு படுத்தினர். மேலும் மியூசிக் சிஸ்டம்,'எல்.இ.டி டிவி' பொருத்தப்பட்டு பாடல் இசைக்கப்படுகிறது.பஸ் புறப்படுகையில், விளக்குகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒளிர்ந்து, பயணிகளை திரும்பி பார்க்க வைக்கிறது. அரசு பேருந்து தானே என்று அலட்சியம் காட்டாமல்,பஸ்சின் பணியாளர்கள் தங்கள் சொந்த செலவில் பஸ்சை அழகு படுத்தி வருகின்றனர்.

தேவகோட்டையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்படும், அரசு பேருந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர், வழியாக மாலை 5:00 மணிக்கு திருப்பூர் சென்றடைகிறது. பேருந்தின் பல வசதிகளால் கலெக் ஷனும் அதிகரிக்கிறது.