Nagaratharonline.com
 
விராமதியில் படைப்பு வீட்டில் தீ விபத்து  Jan 28, 19
 
விராமதியில் படைப்பு வீட்டில் தீப்பற்றியதால் மரங்கள் எரிந்தன.விராமதியில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான படைப்பு வீடு உள்ளது. பாரம்பரியமான இந்த பழைய வீட்டில் வழிபாட்டு மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் குடும்பத்தினர் கூடுவர்.

மாடிப்பகுதி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அதில் குடியிருந்தவர் சில நாட்களுக்கு முன் காலி செய்து விட்டார். இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு இந்த வீட்டில் புகை வருவதை பார்த்த பக்கத்திலுள்ளவர்கள் அணைக்க முயன்றனர். திருமயம் தீயணைப்புத்துறையினரும் தீயணைப்பில் ஈடுபட்டனர். தீ விபத்தில் வீட்டிலுள்ள தேக்குமரச் சட்டங்கள் எரிந்து சாம்பலாயின

.கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.