Nagaratharonline.com
 
புதுவயலில் ரோட்டோர ஆக்கிரமிப்பால் நெருக்கடி.  Sep 13, 18
 
புதுவயலில் மேட்டுக்கடையிலிருந்து - பஸ் ஸ்டாண்ட் வரையிலான பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள வங்கிகளுக்கு வணிகர்கள் சென்று வர முடிவதில்லை.

நான்கு வழிச்சாலை அகலமுள்ள ரோட்டில் ஒரு வழிச்சாலை அளவு இடம் இல்லாத வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடைகளின் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசு தொல்லை அதிகரித்து, சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கடை முன்பும் 5-க்கும் மேற்பட்ட நாய்கள் திரிகிறது. ரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக செல்வதால் பலர் விபத்துக்குள்ளாகின்றனர். புதுவயல் சந்தைப்பேட்டையில் பேரூராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்ட நிலையில், அது பயன்பாடின்றி உள்ளது.
நெடுஞ்சாலை துறை, போலீஸ் அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள் தினமும் இந்த ரோட்டில் சென்றபோதும், ஆக்கிரமிப்பை அகற்ற முன் வருவதில்லை. மாவட்ட நிர்வாகம் புதுவயலில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பை அகற்றி வாகன ஓட்டிகள் நிம்மதியாக செல்ல வழி வகுக்க
வேண்டும்.