Nagaratharonline.com
 
2 பஸ்கள் 'பெர்மிட்' ரத்து  Aug 3, 18
 
குன்றக்குடி அருகே மரத்தில் மோதி, பஸ் கவிழ்ந்ததில் 2 பேர் இறந்தனர். திருப்புத்துார் அருகே பஸ் கவிழ்ந்ததில் 46 பேர் காயமடைந்தனர். இந்த 2 விபத்துகளும் டிரைவர்களின் அதிவேகத்தால் ஏற்பட்டன. டிரைவர்களின் 'லைெசன்ஸ்' தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

தொடர்ந்து பஸ்களின் 'பெர்மிட்டை' ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர் திருவள்ளுவன் பரிந்துரை செய்தார். அதன்படி 2 பஸ்களின் 'பெர்மிட்டை' தற்காலிகமாக ரத்து செய்து கலெக்டர் லதா உத்தரவிட்டார்.