Nagaratharonline.com
 
கண்டக்டர் இல்லாமல், 231 பஸ்கள் இன்று முதல் இயக்கம்  Jul 5, 18
 
சேலம் கோட்டத்தில், 40; கோவையில், 91; விழுப்புரத்தில், 28; கும்பகோணத்தில், 42; மதுரையில், 10 மற்றும் நெல்லை கோட்டத்தில், 20 என, 231 பஸ்கள், கண்டக்டர்கள் இல்லாமல் இயக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில், 'ஒன் டூ ஒன், பாயின்ட் டூ பாயின்ட், பைபாஸ் ரைடர், எக்ஸ்பிரஸ் ரைடர்' ஆகிய பெயர்களில், நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்கள், இன்று முதல் கண்டக்டர்கள் இல்லாமல் இயங்கும்.

பஸ் நிலையத்தில், ஒரு கண்டக்டர் இருப்பார். அவர், பஸ்களில் பயணிருக்கான டிக்கெட்களை வழங்குவார். பஸ்சில், பயணியர் நிறைந்தவுடன், கதவுகள் தாழிடப்படும். பின், பஸ்களை இயக்க, டிரைவருக்கு, கண்டக்டர் உத்தர விடுவார். பஸ் உரிய இடத்திற்கு சென்றதும், பயணியர் இறக்கி விடப்படுவர்.

* சேருமிடத்திலிருந்து மீண்டும் கிளம்பும் போதும், பஸ் நிலையத்தில் உள்ள கண்டக்டர், பயணியருக்கு டிக்கெட் வழங்கி, கதவுகளை தாழிட்டு, பஸ்களை இயக்க உத்தரவிடுவார். பயணியர் அளிக்கும் வரவேற்பை பொறுத்து, இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.