Nagaratharonline.com
 
தாம்பரம் – நெல்லை அந்த்யோதயா ரயில்  Jun 10, 18
 
சென்னை தாம்பரத்திலிருந்து - திருநெல்வேலிக்கு அந்த்யோதயா விரைவு ரயிலை தினந்தோறும் இயக்குவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே துறை அறிவித்தது. ஜூன் 8 மாலை 4.30 மணிக்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோஹன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் தினந்தோறும் தாம்பரத்தில் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருநெல்வேலியை அடைகிறது. மறுமார்க்கமாக திருநெல்வேலியில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை அடைகிறது.

இது செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட 9 இடங்களில் நின்று செல்கிறது. முன்பதிவில்லாத 16 பெட்டிகளைக் கொண்ட ரயிலாக இது இயக்கப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் - ரூ.85, மயிலாடுதுறை - ரூ.120, கும்பகோணம் - ரூ.130, தஞ்சாவூர் - ரூ.140, திருச்சி - ரூ.155, திண்டுக்கல் - ரூ.185, மதுரை - ரூ.200, விருதுநகர் - ரூ.210, திருநெல்வேலி - ரூ.240 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்து மற்றும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைவிட குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tambaram Dep : 00.30 Hrs....... Trichy arrival at 8.15 am
Trichy dep at 11.59 pm........Tambaram arrival at 9.45 am