Nagaratharonline.com
 
காரைக்குடி அழகப்பா கலை கல்லுாரி வளாகத்தில் அழகப்பர் பிறந்த நாள் விழா  Apr 7, 18
 
அழகப்பர் பிறந்த நாள் விழாவையொட்டி துணைவேந்தர் சுப்பையா தலைமையில் பல்கலை அதிகாரிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கலை கல்லுாரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். அழகப்பரின் பேரன் வயிரவன் ராமனாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக முன்னாள் மாணவர்கள் சார்பில் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலை சார்பில் நிறுவனர் நாள் விழா நடந்தது