Nagaratharonline.com
 
செட்டிநாடு வீடுகளில் கர்நாடகா மாணவர்கள் ஆய்வு  Jan 29, 18
 
;தேவகோட்டை நகரிலுள்ள செட்டிநாடு பாரம்பரிய வீடுகளை கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த கட்டடக்கலை பயிலும் மாணவர்கள் ஆய்வு செய்தனர்.

கர்நாடகா,மைசூர் வாடியார் நகரிலுள்ள சென்டர்பார் ஆர்க்கிடெக்சர் கல்லுாரி மாணவர்கள் கட்டடக்கலை தொழில்நுட்பம் அறிய பல இடங்களுக்குசென்று கட்டடங்களைப் ஆய்வு செய்கின்றனர்.

அதில் ஒரு பகுதியாகசெட்டிநாடு கட்டடக்கலை அறிய கல்லுாரி டீன் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தேவகோட்டை வந்தனர். தற்போதைய கட்டடக்கலை தொழில் நுட்பம் பண்டைய தொழில் நுட்பத்திற்கும் உள்ள மாறுபாடுகுறித்து ஆய்வு செய்தனர்.

தேவகோட்டையைச் சேர்ந்த மதுரை ஆர்க்கிடெக்சர் நாகலெட்சுமண் கட்டடங்களின் பகுதிகளை விளக்கினார்.

டீன் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், இங்கு நான்கு வேறு,வேறு காலங்களில் கட்டப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து கட்டடக்கலை தொழில்நுட்ப மாற்றங்களை அறிந்தோம். பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பல்வேறு பரிமாணங்களில் கட்டப்பட்ட கட்டடங்களாக உள்ளன. அவர்களின் விருந்தோம்பல் பண்பும் எங்களைக் கவர்ந்தது' என்றார்.