Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் ஸ்ரீ பெருமாள் ஆற்றில் இறங்கினார்.  Apr 29, 10
 
சிவ​கங்கை,ஏப்.28: ​ ​ நாட்டரசன்கோட்டை ஆற்றில் பிரசன்னவெங்கடாசலபதி 57 ஆண்டுகளுக்கு பிறகு இறங்கினார்,

​ ​ சிவகங்கை சமஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயில் சித்திரைத் திருவிழா முன்பு வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வந்த நிலையில் பல்வேறு காரணங்களால் விழா நடைபெறாமல் போனது.

​ ​ இந்நிலையிóல் மீண்டும் இந்த ஆண்டு சித்திரை விழா நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.​ இதனால் நாட்டரசன்கோட்டை பகுதியில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.​ ​

​ செவ்வாய்க்கிழமை காலை காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது.​ மாலையில் பெருமாள் பல்லக்கில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தந்தார்.​ புதன்கிழமை காலை பெருமாள் ஆற்றில் இறங்கும் வைபவம் காலை 9 மணிக்கு துவங்கியது.

​ ​ குதிரை வாகனத்தில் பெருமாள் புறப்பட்டு கோயில்களிலும்,​​ மண்டகப்படிகளிலும் எழுந்தருளி வந்து சிவகங்கை சாலையில் உள்ள தண்ணீர் பந்தலில் ஆற்றில் இறங்கினார்.

ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.

​ ​ ​ விழா ஏற்பாடுகளை ஆலய கண்காணிப்பாளர் சரவணகணேசன்,​​ கெüரவ கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்,​​ தேவஸ்தான மேலாளர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர்.​ வியாழக்கிழமையும் பெருமாள் பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.​ இரவு 8 மணிக்கு கோயிலை வந்தடைகிறார்.


Source: Dinamani