Nagaratharonline.com
 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம்  Dec 25, 17
 
சைவ திருத்தலங்களில் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது.

(டிச. 25) இரவு வெள்ளி சந்திரபிரபை, அன்னம், மயில், மூஷிகம், ரிஷபம் ஆகிய வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதியுலா நடக்கிறது. 28-ம் தேதி இரவு தெருவடைச்சான் நடக்கிறது. 31-ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிக்ஷாடனர் வெட்டுக்குதிரையில் வீதியுலா நடக்கிறது. தேர் திருவிழா 1-ம் தேதியும், 2-ம் தேதி மதியம் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 3-ம் தேதி இரவு முத்து பல்லக்கு வீதியுலா நடக்கிறது.