Nagaratharonline.com
 
NEWS REPORT: ‘பபாசி’ தலைவராக வைரவன் தேர்வு  Dec 8, 17
 
 
சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பபாசி’ நிர்வாகிகள் தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ‘குமரன் பதிப்பகம்’ வைரவன் ( அமர்ந்து இருப்பவர்களில் இடமிருந்து இரண்டாவது) மற்றும் புதிய நிர்வாகிகள்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக குமரன் பதிப்பகத்தின் வைரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வரும் ஜனவரியில் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குமரன் பதிப்பகத்தைச் சேர்ந்த வைரவன் ‘பபாசி’-யின் தலைவராகவும், வனிதா பதிப்பகத்தின் மயிலவேலன், ஜெய்கோ பப்ளிஷிங்கைச் சேர்ந்த சிவராமன் ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவாலயம் வெங்கடாசலம் செயலாளராகவும், கிரி டிரேடிங் சீனிவாசன் பொருளாளராகவும், லியோ புக் டிஸ்டிரிபியூட்டர்ஸ்ஸைச் சேர்ந்த குமரன் இணைச் செயலாளர் ஆகவும், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் சுரேஷ்குமார், பெல்கோ குருதேவ் ஆகியோர் துணை இணைச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்


இஸ்லாமிக் பவுண்டேஷன் டிரஸ்ட் டைச் சேர்ந்த ஜலாலுதீன், ‘உணவு உலகம்’ மெய்யப்பன், சர்வோதய இலக்கியப் பண்ணையின் புருஷோத்தமன், விகடன் மீடியா சர்வீஸின் ரங்கராஜன், ராம்கா புக்ஸின் மாசிலாமணி , ஸ்பைடர் புக்ஸின் முபாரக், ’லெஃப்ட் வேர்டு’ சிராஜூதீன் , டைகர் புக்ஸின் சுப்பிரமணியன் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வள்ளுவர் பண்ணையின் கதிரேசன், தமிழ்ச்சோலையின் பிரபாகரன், ஸ்காலஸ்டிக்கின் பார்த்தசாரதி, ஸ்ரீ சிவா புக்ஸின் சிவகுமார் ஆகியோர் நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ‘பபாசி’ செயலாளர் வெங்கடாசலம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரியில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியை புதிய நிர்வாகிகள் குழு முன்னின்று நடத்த வுள்ளது.