Nagaratharonline.com
 
வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா  Apr 26, 10
 
பொன்னமராவதி : வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் மற்றும் அக்கினிக்காவடி திருவிழா நடந்தது.


பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் பூச்சொரிதல் 25ம் தேதி இரவு நடந்தது. பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக பூ தட்டுகளை எடுத்து வந்து அம்மன் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூ தொட்டியில் கொட்டினர்.பின்னர் அதிகாலை அம்மனுக்கு புஷ்பாஞ்சலி நடந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று (26ம் தேதி) பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக பால்குடம், காவடி, எழனி, தீ சட்டி என எடுத்துகோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்கினியில் இறங்கி அம்மனை வழிபட்டனர்.

source : Dinamalar