Nagaratharonline.com
 
ரேஷன் கடையிலேயே கார்டுகளில் புதிய பெயர்களை சேர்க்க ஏற்பாடு  Sep 5, 17
 
சிவகங்கை கலெக்டர் லதா கூறியதாவது: கலெக்டர், தாலுகா, நகராட்சி அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க 'இசேவை' மையங்களில் 'ஸ்மார்ட்' ரேஷன்கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். புதிய உறுப்பினர்களை சேர்க்க, ஐந்து வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் ஆதார் அட்டையையும், ஐந்து வயதிற்குள் இருந்தால் பிறப்புச் சான்றையும் சம்பந்தப்பட்ட ரேஷன்கடைகளில் 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்ய வேண்டும்.
முகவரி மாற்றம்: ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, எரிவாயு நுகர்வோர் அட்டை, சொந்த வீடு எனில் வீட்டு வரி ரசீது, வாடகை வீடு எனில் வாடகை ஒப்பந்தம், வீட்டு ஆவணம், மின் ரசீது, தொலைபேசி ரசீது, வங்கி கணக்கு புத்தக நகல், டிரைவிங் லைெசன்ஸ், பான் அட்டை, தபால்துறை அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி முகவரி மாற்றம் செய்யலாம். இதே ஆவணங்களை புதிய ரேஷன்கார்டு பெறவும் பயன்படுத்தலாம்.
குடும்பத் தலைவர் மாற்றம்: ஆதார் அட்டை, இறப்பு சான்று, விவகாரத்து சான்று உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி குடும்பத் தலைவர் பெயர் மாற்றலாம். மேலும் பி.எச்.எச்., ரேஷன் கார்டில் மூத்த பெண் உறுப்பினர் குடும்பத் தலைவராக இருத்தல் வேண்டும். இல்லாதபட்சத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் உறுப்பினர் இருக்கலாம்.
இதுதொடர்பான சந்தேகங்களை மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் 98438 25981, கூட்டுவுத்துறை துணைப்பதிவாளர் பொதுவினியோகத் திட்ட
அலுவலக கண்காணிப்பாளர்
73387 21805, கலெக்டர் அலுவலக இலவச எண் 1077 ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.