Nagaratharonline.com
 
NEWS REPORT: சென்னை நகரத்தார் நற்பணி மன்றத்தின் ஆன்மீக சுற்றுலா  May 21, 17
 
 
சென்னை நகரத்தார் நற்பணி மன்றத்தின் சார்பாக, உறுப்பினர்கள் இரு நாட்கள் ஆன்மீக சுற்றுலாவாக, திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சென்று, விடங்கர் தரிசனம் கண்டு அருள் பெற்றனர்.

திருநள்ளாறு நகர விடங்கர் (விடங்கர் என்றால் உளி படாத சுயம்புவாக தோன்றிய லிங்கம்), திருவாரூர் வீதி விடங்கர், திருக்காரவாசல் ஆதிவிடங்கர் (முகுந்த சக்கரவர்த்தி முதலில் பிரதிஷ்டை செய்த தலம்), திருக்குவளை அவனிவிடங்கர்(எப்போதும் குவளை சாற்றி அபிஷேகம்), திருவாய்மூர் நீலவிடங்கர், திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர், திருத்தங்கூர் வெள்ளிமலை நாதர், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர், சூரசம்ஹாரம் முடிந்து பாவம் நீங்க முருகன் தோற்றுவித்த குளம் அமைந்த கீழ்வேளூர் கேடிலியப்பர், முருகன் சிவனை நோக்கி தவம் இருந்தபோது தாயை அழைத்து நான்கு திசை மற்றும் ஆகாயம் காத்து அருள் பாலிக்கும் அஞ்சுவட்டத்தம்மன் , கோணலாக காட்சி தரும் திருப்புகலூர் கோணப்பர், ராமர் தந்தைக்கு தர்ப்பணம் செய்த சிதிலபதி முக்தீஸ்வரர் ( இங்கு நாள் கிழமை பார்க்காமல் எந்நாளும் தர்ப்பணம் செய்யலாம்), லலிதாம்பிகை கட்டளை இட்டு , லலிதா சஹஸ்ரநாமம் பாடிய திருமீயச்சூர், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் ( ராகு கேது தலம் ), கல்லில் வடித்த முருகன் மற்றும் தேவியரை தாங்கிய மயில் சிலை, தத்ரூபமாக பறந்தபோது எட்டிப் பிடி என்று சொல்லி பிடித்த எட்டுக்குடி, கட்டை விரல் மற்றும் கண் இல்லாத சிற்பி வடித்த என்கண் , ஸ்ரீவாஞ்சியம், வெண்ணை யால் உருவான கல் எடுக்கமுடியாமல் சிக்கிய சிக்கல், தலைமுடியுடன் காட்சி தரும் சௌரிராஜ பெருமாள் மற்றும் பல ஆலயங்களுக்கும் சென்று வந்தனர்.

சுற்றுலா ஏற்பாடுகளை மன்றத்தின் தலைவர் Dr.S, சீனிவாசன், செயலாளர் ஆறு. சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.