Nagaratharonline.com
 
'பிளான் அப்ரூவல்' பெற 'புரோக்கர்கள்'.தயக்கம் ஏற்கனவே இடம் வாங்கியோர் கலக்கம்  Apr 20, 17
 
, ஏற்கனவே ஏற்படுத்தப்பட்ட பிளாட்களுக்கு திட்டக் குழுமத்திடம் 'பிளான் அப்ரூவல்' பெறுவதற்கு ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஏற்கனவே ஒரு சில 'பிளாட்களை' வாங்கியோர் கலக்கமடைந்துள்ளனர்.
'பிளாட்டுகளை' ஏற்படுத்தும்போது 59 சென்ட் வரை பொது பயன்பாட்டிற்கு இடம் ஒதுக்க தேவையில்லை. அதற்கு மேல் இருந்தால் பூங்கா போன்ற பொது பயன்பாட்டிற்காக மொத்த இடத்தில் 10 சதவீதம் ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் 23 அடியில் பாதை ஒதுக்க வேண்டும். அதேபோல் பிளாட்டுகளுக்கான 'பிளான் அப்ரூவல்' திட்டக் குழுமத்திடம் பெற வேண்டும். பெரும்பாலான ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடம் 'பிளான் அப்ரூவல்' பெற்று பிளாட்டுகளை விற்பனை செய்து வந்தனர்.
முறையான திட்டக்குழுமத்திடம் அனுமதி பெறாத பிளாட்டுகளை விற்பனை செய்ய சமீபத்தில் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஏற்கனவே உருவாக்கிய பிளாட்டுகளை விற்பனை செய்வதில் ரியல் எஸ்டேட் புரோக்கர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'பிளான் அப்ரூவலுக்காக' அணுகும் புரோக்கர்களிடம் விதிமுறைப்படி பிளாட்டுகளை மாற்றியமைக்க வேண்டுமென, திட்ட குழும அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி மாற்றியமைத்தால் கூடுதல் செலவாகும் என்பதால் 'பிளான் அப்ரூவல்' பெற தயக்கம் காட்டுகின்றனர். இதனால் ஏற்கனவே சில 'பிளாட்டுகளை' மட்டும் வாங்கியோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
திட்டக் குழும அதிகாரி ஒருவர் கூறுகையில், ' தினமும் ஏராளமானோர் 'பிளான் அப்ரூவலுக்காக' வருகின்றனர். ஆனால் விதிமுறைப்படி 'பிளாட்டுகளை' மாற்றியமைக்க சொன்னால் தயங்குகின்றனர்,' என்றார்.