Nagaratharonline.com
 
கோயில்களில் சிவராத்திரி சிறப்பு வழிபாடு  Mar 1, 17
 
கோயில்களில் சிவராத்திரியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை, வழிபாடு நடைபெற்றது.

பொன்னமராவதி ஆவுடைநாயகி சமேத சோழீஸ்வரர் கோயில், மூலங்குடி பொய்சொல்லா மெய்யர் கோயில், புதுப்பட்டி நகரத்தார் கோயில்,உலகம்பட்டி உலகநாதர் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் கோயில், திருக்களம்பூர் கதலீஸ்வரர் கோயில், நெற்குப்பை சோணையன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் சிவராத்திரி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.

ராங்கியம் கருப்பர் கோவிலில் கப்பரை திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது