Nagaratharonline.com
 
செட்டிநாட்டு பிரமுகர்கள் குழு ஜன. 16 இல் மியான்மருக்கு பண்பாட்டுப் பயணம்  Jan 14, 17
 
செட்டிநாடுப் பகுதியைச் சேர்ந்த பிரமுகர்கள் ஜனவரி 16-ஆம் தேதி மியான்மருக்கு பண்பாட்டுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து மியான்மர் (பர்மா) நகரத்தார் முதலீட்டாளர்கள் குழுத்தலைவர் பேராசிரியர் ஆறு. அழகப்பன் கூறியதாவது: ஜனநாயக நாடாக மியான்மர் (பர்மா) மாறியுள்ளது. நீதியரசர் ஏஆர்.லெட்சுமணன், காசிசத்திர முன்னாள் செயலாளர் அரியக்குடி எஸ்.நாச்சி யப்பன், யாழினி பதிப்பக உரிமையாளர் மு.சுப்பிரமணியன், உலகம்பட்டி தொழிலதிபர் லெ. நாராயணன், தேவகோட்டை ஏ.ஆர்.எம். நாராயணன் மற்றும் நானும் இணைந்த குழுவினராக ஜனவரி 16-ந்தேதி பண்பாட்டு பயணம் மேற்கொள்கிறோம்.
இக்குழுவினர் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கு வாழும் தமிழர்கள் பகுதியில் நடத்தப்படும் பொங்கல் விழாவில் கலந்துகொள்கின்றனர். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அந்நாட்டில் கட்டிய 67 கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர். மேலும் அங்கு ஜனநாயக ஆட்சி அமைத்த ஆங்காங் சூயியைச் சந்திக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
மியான்மர் வரும் இக்குழுவினரை வரவேற்கவும் நிகழ்ச்சிகளுக்கும் அங்குள்ள தமிழ் ஆர்வலரும் தொழிலதிபருமான தமிழ்ச்சங்க புரவலர் எம்.கே. முனியாண்டி மற்றும் குழுவினர் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் என்றார்.