Nagaratharonline.com
 
டிச.18 இல் காரைக்குடி திருக்குறள் கழக 63 ஆவது ஆண்டு குறள் விழா  Dec 14, 16
 
காரைக்குடி திருக்குறள் கழகத்தின் 63ஆம் ஆண்டு குறள் விழா கண்ணதாசன் மணிமண்டபத்தில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் திருக்குறள் இலக்கிய விழாவுக்கு திருக்குறள் கழகத் தலைவர் பெரி.பஞ்சநதம் தலைமை வகிக்கிறார். செயலாளர் என்.பி. ராமசாமி அறிமுக உரையாற்றுகிறார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் தொடக்க உரையாற்றுகிறார். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் முன்னாள் நீதிபதி மெ. சொக்க லிங்கம் சிறப்புரையாற்றுகிறார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கேஆர்.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுகின்றனர். மதியம் நடைபெறும் பட்டிமன்றத்துக்கு பேராசிரியர் ம.சிதம்பரம் நடுவர் பொறுப்பேற்று நடத்துகிறார். நிறைவு விழாவில் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் சிறப்புரையாற்றுகிறார். விழாவில், குறளுக்குத் தொண்டு புரிந்த புதுக்கோட்டை தி.சு. மலைப்பனுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. மேலும், குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும், 1330 குறள் ஒப்பித்த பள்ளி மாணவர்களுக்கு குறள் மாமணி விருதும் அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றன