Nagaratharonline.com
 
திருப்புத்தூர் ரயில்வே டிக்கெட் ரிசர்வேஷன் சென்டர் மூட திட்டம்  Nov 10, 16
 
திருப்புத்துார் தலைமை தபால் நிலையத்தில் உள்ள ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் விரைவில் மூடப்பட உள்ளது.

போதிய இன்டர்நெட் வேகம் இல்லாதது, சர்வர் பிரச்னை, நிரந்தரப் பணியாளர் நியமிக்காதது, பதிவு நேரத்தை மாலையில் விஸ்தரிக்கப்படாதது என்று பல காரணங்களால் இந்த வசதி முழுமையாக மக்களுக்கு சேரவில்லை. தனியார் முன்பதிவு நிலையங்களுக்கு அலையும் நிலையே உருவானது. சராசரியாக தினசரி 10 டிக்கெட்கள் மட்டுமே பதிவாகிறது.
இந்நிலையில் தினசரி 25 டிக்கெட்களுக்கு குறைவாக பதிவு செய்யும் மையங்கள் மூடப்படும் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி அண்மையில் சேலம் கோட்டத்தில் 7 ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன.
இந்தப் பட்டியலில் திருப்புத்துார் மையமும் உள்ளதாகக் கூறப்படுகிறது. டிசம்பரில் இந்த மையம் மூடப்படும் என்றுகூறப்படுகிறது.
தபால் அலுவலகத்தில் கேட்டபோது, 'அதற்கான உத்தரவு ஏதும் இதுவரை வரவில்லை 'என்கின்றனர்.
'வந்த பின் சிரமப்படுவதை விட வரும் முன் தவிர்ப்பதே நல்லது' எனவே சிவகங்கை மாவட்ட எம்.பி.க்கள் செந்தில்நாதன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் நடவடிக்கை எடுத்து முன்பதிவு மையம் மூடப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்