Nagaratharonline.com
 
காரைக்குடியில் தீவிர வாகன சோதனை: ரூ. 69,700 அபராதம் வசூலிப்பு  Aug 7, 16
 
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் காரைக்குடி துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 12 ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் காரைக்குடி தேவர் சிலை, அம்பேத்கர் சிலை, கழனிவாசல் மற்றும் அரியக்குடி ரயில்வே கடவு பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் இரவு வரை தீவிர வாகனசோதனை மேற்கொண்டனர். மேலும் தங்கும் விடுதி, விடியோ கடைகளிலும் சோதனை நடத்தினர்.

வாகனச்சோதனையில் 510 வழக்குகள் பதியப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாதவர்களிடமிருந்து ரூ. 69,700 அபராதம் வசூலித்தனர்.