Nagaratharonline.com
 
காரைக்குடியில் கம்பன் திருநாள் மார்ச் 27-ல் துவக்கம்  Mar 24, 10
 
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கம்பன் கழகம் சார்பில் 72-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா வரும் சனிக்கிழமை (மார்ச் 27) தொடங்கி திங்கள்கிழமை வரை 3 நாள்கள் காரைக்குடியிலும், செவ்வாய்க்கிழமை கம்பன் சமாதி அமைந்துள்ள நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலிலும் நடைபெறவுள்ளதாக கம்பன் அறநிலை அறங்காவலர் சத்தி. திருநாவுக்கரசு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியது: கம்பன் மணிமண்டபத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையில் விழா தொடங்குகிறது. கம்பன் அடிசூடி வரவேற்கிறார். தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தொடக்கவுரையாற்றுகிறார்.

புதுச்சேரி கம்பன் கழகத் தலைவர் ந. கோவிந்தசாமி அமரர் ஜி.கே. சுந்தரத்தின் படத்தைத் திறந்து வைத்துப் பேசுகிறார். பழ. பழனியப்பன் நிறுவியுள்ள மீனாட்சி- பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச் சொற்பொழிவை பழ. முத்தப்பன் நிகழ்த்துகிறார். மதுரை கம்பன் கழகத் துணைத் தலைவர் சங்கர சீதாராமன் சொற்பொழிவு நூலை வெளியிட்டும், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளையும் வழங்குகிறார்.

புதுச்சேரி கம்பன் கழகத் துணைத் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து பள்ளத்தூர் பழ. பழனியப்பன் எழுதிய கம்பராமயண உரை யுத்த காண்டம் 4 தொகுதிகளை வெளியிடுகிறார். நிறைவாக, விழாத் தலைவர் ஷயாதும் ஊரே' என்ற தலைப்பில் பேசுகிறார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை, ஷகம்பனில் கணியன்' என்ற தலைப்பில் சோ. சத்தியசீலன் தலைமை உரையுடன் விழா தொடங்குகிறது. மருத்துவர் தி. அருணாசலம் எழுதிய ஷஉவமை சொல்வதில் உவமையில்லாக் கம்பன்', அ. அறிவு நம்பி எழுதிய ஷசெம்மொழி இலக்கியச் சிந்தனைகள்' ஆகிய நூல்களை அருப்புக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் டி.ஆர். தினகரன் வெளியிடுகிறார். ஷதீதும் நன்றும்' என்ற தலைப்பில் தெ. ஞானசுந்தரம் பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து, புதுச்சேரி கம்பன் கழகம் வழங்கும் இயக்குநர் குணவதி மைந்தன் இயக்கிய ஷகவிச் சக்கரவர்த்தி கம்பன் வாழ்க்கை வரலாறு' குறும்படம் திரையிடப்படுகிறது. இரவு 9 மணிக்கு ஷராம நாடகம்' என்ற தலைப்பில் கௌசல்யா சிவகுமார் இசைப் பேருரையாற்றுகிறார். அவருடன் நாமகிரி ரமேஷ் பங்கேற்கிறார்.

மூன்றாம் நாள் திங்கள்கிழமை, ஷதருமநெறி நின்ற தம்பியரில் தலைநின்றவர்' என்ற பொருளில் இளம்பிறை மணிமாறன் தலைவர் உரையைத் தொடங்க, ஷகும்ப கருணனே' என்று ருக்மணி பன்னீர்செல்வம், சித்ரா சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அணியும், ஷவீடணனே' என்று விசாலாட்சி சுப்பிரமணியன், கவிதா ஜவ ஹர் ஆகியோர் கொண்ட அணியினரும் பேசுகின்றனர்.

நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை, நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலில் விழா நடைபெறுகிறது. ஷகணியனில் கம்பன்' என்ற தலைப்பில் அ. அறிவொளி தலைமை வகித்துப் பேசுகிறார். கண. சுந்தர் வரவேற்கிறார். ஷபெரியோரை வியத்தல் சிறியோரை இகழ்தல்' என்ற தலைப்பில் சோ. ராமகிருஷ்ணனும், ஷயாவரும் கேளிர்' என்ற தலைப்பில் கோ. சாரங்கபாணியும் பேசுகின்றனர்.

சித்திரை மாதம் என்றால் மதுரையில் சித்திரைத் திருவிழாவைப் போன்று பங்குனி மாதம் என்றால் காரைக்குடி கம்பன் விழாதான் நினைவுக்கு வரும் என்றார் திருநாவுக்கரசு. இப் பேட்டியின்போது, கம்பன் அறநிலை அறங்காவலர்கள் பழ. பழனியப்பன், நா. மெய்யப்பன், கம்பன் கழக மேலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

source : Dinamani