Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற செவ்வாய் பொங்கல்  Jan 24, 16
 
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் செவ்வாய் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் பிரசித்தி பெற்ற சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை அன்று நகரத்தார்கள் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா விமரிசையாக நடைபெறும்.

இந்த பொங்கல் விழாவில் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நகரத்தார்கள் தவறாமல் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டு செவ்வாய் பொங்கல்விழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு உள்ள பகுதியில் சுமார் 900 பேர் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்தனர்.

பின்னர் கண்ணுடைய நாயகி அம்மனுக்கு விஷேச, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.