Nagaratharonline.com
 
திருப்பத்தூரில் மழைவேண்டி யாகம்  Dec 26, 15
 
திருப்பத்தூர், குளம்கரை கூத்த அய்யனார் கோயிலில் வெள்ளிக்கிழமை மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்யாததால் கண்மாய், குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் நிரம்பாத சூழ்நிலையில் இந்த யாகம் நடத்தப்பட்டது.

கோயிலில், காலை 6 மணிக்கு முதல் சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமத்துடன் யாகவேள்வியினைத் தொடங்கினர். காலை 8 மணியளவில் பூர்ணாகுதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீசாஸ்தா பெளர்ணமிக் குழுவினரால் சக்தி பூஜை நடைபெற்றது. அய்யனாருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும், கோயில் பிரகாரத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.