Nagaratharonline.com
 
NEWS REPORT: செட்டிநாடு நகரத்தார் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழா  Dec 26, 15
 
மார்கழி மாதம் திருவாதிரை நன்னாளில் நடைபெறுவதான் ஆருத்திரா தரிசனம். இந்த ஆருத்திரா தரிசனத்தை நேரடியாக கண்டாலே போதும் பாவங்கள் நீங்கி, நாம் எங்கு சென்றாலும் நம்மை பின் தொடரும் தரித்திர துஷ்ட தேவதைகள், தலைதெறிக்க ஓடிவிடும் என்பது ஐதீகமாகும்.

விழாவையொட்டி நெற்குப்பை மரகதவல்லி மனமொத்த கண்டீஸ்வரர் ஆலயத்தில், அதிகாலை 5 மணிக்கு நடராஜருக்கு பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர்,சந்தனம் திருநீர்,இளநீர்,பன்னீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. பிறகு, நடராஜருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. சிவகாமி அம்பாள் உடனுறை நடராஜர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கும் மலர் அலங்காரம் செய்து தீப ஆராதனை நடை பெற்றது.

பொன்னமராவதி சோழீஸ்வரர் சமேத ஆவுடைநாயகிகோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்கவாசகர் எதிர்சேவையில் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

வலையபட்டி மலையாண்டி கோயிலில் அபிஷேக, ஆராதனை, சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. திருக்களம்பூர் கதலீஸ்வரர் கோயில், பொன்னமராவதி புதுப்பட்டி நகரத்தார் சிவன்கோயில், வேந்தன்பட்டி நந்தீஸ்வரர் கோயில், உள்ளிட்ட கோயில்களில் விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்பட்டது.