Nagaratharonline.com
 
செட்டிநாடு சேலை உற்பத்தி மும்முரம்  Mar 16, 10
 
கோடை துவங்கியதால், காரைக்குடி செட்டிநாடு சேலை உற்பத்தி அதிகரித்துள்ளது. சில மாதங்களாக வேலை இன்றி தவித்த நெசவாளர் கள், தொழில் சூடுபிடித்துள்ளதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




காரைக்குடி கருணாநிதி நகர், நெசவாளர் காலனி, காளவாய் பொட் டல், சத்தியமூர்த்தி நகர், வைத்தியநாதபுரம், கோவிலூரில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ளனர். ஒரு குடும்பத்தினர் சராசரியாக தினமும் எட்டு சேலைகள் நெய்யலாம். இதன்மூலம் 1,000 ரூபாய் கிடைக்கும். இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு சேலைகளுக்கு தமிழகம், வெளி மாநிலங்களில் வரவேற்பு அதிகம். வெளிநாட்டில் வசிக்கும் நகரத்தார் சமூக்தினர் விரும்பி அணிவதால், அந்நாடுகளிலும் இச்சேலைகளுக்கு அமோக வரவேற்பு உண்டு. காரைக்குடிக்கு சுற்றுலா வரும் வெளிநாடினர், இச்சேலைகளை விரும்பி வாங்குவர்."எம்ராய்ட்', கல் வேலைப்பாடு கொண்ட சேலைகள் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோடை காலத்தில் உடுத்த இதமாக இருக்கும். வெயிலின் தாக்கம் தெரியாது.




உற்பத்தி அதிகரிப்பு: தற்போது இச்சேலைகள் தயாரிப்பில், நெசவாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு குடும்பத்தில் 16 முதல் 20 சேலை வரை உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி அதிகரிப்பால் நெசவாளர் குடும்பத்தினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.கைத்தறி நெசவாளர் சங்க தலைவர் மணி, செயலாளர் பழனியப்பன் கூறியதாவது:பருவ மழையால் சில மாதத்திற்கு முன், இத்தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பலர் இத்தொழிலுக்கு முழுக்கு போட்டு, மாற்று தொழிலில் ஈடுபட்டனர். தற்போது உற்பத்தி அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன் மாதந்தோறும் இரண்டு லட்சம் சேலைகள் உற்பத்தியானது. தற்போது ஐந்து லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

source : Dinamalar